ஆப்கன் பஞ்சம் போக்க உதவுங்கள் .. ஐ.நா. கோரிக்கை
ஜெனீவா:
ஆப்கானிஸ்தான் மக்கள் கஷ்டத்தின் உச்ச கட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குஉதவ 220 மில்லியன் டாலருக்கும் மேல் நிதி உதவி தேவைப்படுகிறது என ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வரும் சண்டை காரணமாக அங்கு விவசாயம் செய்யமுடியாமல் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடும் பஞ்சம் நிலவிவருகிறது, கிடைக்கும் பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது. இங்குகஷ்டப்படும் மக்களுக்கு உதவுமாறு மற்ற நாடுகளை ஐ. நா.கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்கான் மக்களுக்கு உதவ 229 மில்லியன் தேவை என ஐ. நா கடந்த நவம்பர் மாதம்29-ம் தேதி கேட்டுக் கொண்டது. ஆனால் இது வரை 7.3 மில்லியன் டாலர்கள்அளவுக்கு மட்டுமே உதவி நிதி கிடைத்துள்ளது.
ஐ.நா. கேட்டுள்ள அனைத்து உதவிகளும் கிடைத்தால் கூட அது 2001 வருடத்திற்குமட்டும் போதுமானதாக இருக்கும் என ஐ.நா. சபையைச் சேர்ந்தஆப்ரகானிஸ்தானுக்கான மனிதவள இயக்குனர் அன்டோனியோ டோமினிஜெனீவாவில் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் மூலமும், சண்டை காரணமாகவும் 5,00,000 பேர்பாதிக்கப்பட்டனர். 1,70,000 பேர் அகதிகளாகி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.சென்ற செப்டம்பர் மாதம் முதல் 10,000 ஆப்கானிஸ்தானியர்கள் டாஜிகிஸ்தான்எல்லையில் ஆதரவின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர் கமிஷனர் கூறுகையில், 1980-ம் ஆண்டு ஆப்கான் -ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே ஆப்கானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவருகிறது.
இதுவரை பாகிஸ்தானில் 1.2 மில்லியன் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். ஈரானில்1.3மில்லியன் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர் என கூறினார்,
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications