சந்திரிகாவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
கொழும்பு:
ஆளும் கட்சிக்கு எதிரான இலங்கை எதிர்க்கட்சியினரின் ஐந்து நாள் எதிர்ப்பு பேரணி கொழும்பை வந்தடைந்தது.
இலங்கை சுதந்திர தினத்தன்று கண்டியில் துவங்கிய இந்த பேரணியை துவக்கி வைத்த ஐக்கிய தேசியக் கட்சிதலைவர் ரணில் விக்ரமசிங்கே இப்பேரணி ஆளும் சந்திரிகா குமாரதுங்காவை பதவியிலிருந்து இறக்குவதற்கானமுதல் படி என்றார்.
கொழும்பில் பேரணியின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிதொண்டர்கள் பேரணி நிறைவை குறிக்கும் வகையில் ஆட்டம் பாட்டத்துடன் வெடி வெடித்து கொண்டாடினர்.
சந்திரிகாவின் ராஜினாமாவைக் கோரிய எதிர்க்கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சியின் நிறமான பச்சை நிறஉடையில் வந்தனர்.
இலங்கை மத்திய வங்கி இலங்கை கரன்ஸியை கட்டுப்பாடற்ற வர்த்தகத்திற்கு அனுமதித்ததால் கரன்ஸி மதிப்புஇரண்டே நாளில் 10% வீழ்ந்தது.
இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்ததுடன் பதுக்கல்காரர்களின் செயலால்பொருட்களின் தட்டுபாடும் ஏற்பட்டது. இதனை எதிர்த்தே இப்பேரணியை எதிர்க்கட்சியினர் ஏற்பாடுசெய்திருந்தனர்.
பேரணி நிறைவு விழா நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையேமோதல் உருவாகாமல் தடுக்க தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குண்டு துளைக்காத புல்லட் புரூஃப் ஆடைகள் அணிந்துவந்தனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.
இதனிடையே, எதிர்க்கட்சியினர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து சந்திரிகாவின் அரசை கவிழ்க்க முயல்வதாகஅரசின் தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications