தமிழை காப்பாற்றுங்கள் .. அன்பழகன் அறைகூவல்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
சைவம் தழைக்க தமிழ் காரணம் என்று பெருமை பேசினாலும் தமிழ் மொழி தற்போது ஒதுக்கப்பட்ட மொழியாகவே உள்ளது என்று தமிழக கல்விஅமைச்சர் அன்பழகன் வருத்தம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தரும ஆதினக் கலைக்கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் அன்பழகன், தருமை ஆதினம் சைவத்திற்கும்,தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளது பெருமைக்குரியது. ஆதினத்தின் தண்டபாணி தேசிகர் தமிழ் வளர்ப்பில் முக்கிய பங்காற்றினர். அவர் வளர்த்த தமிழ் சைவம்தழைக்க பாடுபட்டது.
அவ்வாறான ஒரு மொழி தற்போது ஒதுக்கப்பட்ட ஒரு நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டும். அது ஒரு நாட்டைக் காப்பாற்றியதற்குச் சமம்.
திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப கற்ற கல்வியின் வழி நடக்க வேண்டும் என்ற அமைச்சர் குஜராத் நிவாரணப்பணியில் ஈடுபடுவது இறைவனுக்கு தொண்டுசெய்வதற்கு சமம் என்றார்.












Click it and Unblock the Notifications