காட்பாடி இளைஞர் திருப்பதியில் கைது
திருப்பதி:
தமிழகத்தின் காட்பாடி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, அவரது இரண்டரை வயது மகனை கழுத்தை நெரித்துக்கொன்றதற்காக திருப்பதி, திருச்சானூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காட்பாடி அருகேயுள்ள காசிகுட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (29). இவரது மனைவி சசிகலா.இவர்களுக்கு சஞ்சய் காந்தி என்ற மகன் உள்ளான். பிரகாஷுக்கு கிருஷ்ணவேணி (27) என்ற பெண்ணுடன்தொடர்பு இருந்திருக்கிறது.
இதுதொடர்பாக சசிகலாவுக்கும், பிரகாஷுக்கும்இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்தடிசம்பர் மாதம் 30-ம் தேதி சசிகலாவுடன் கோபித்துக் கொண்டு, சஞ்சய் காந்தியுடன் கிருஷ்ண வேணி வீட்டுக்குசென்று விட்டார் பிரகாஷ். கிருஷ்ணவேணியின் வீடு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள ராவுலுபல்லேகிராமத்தில் உள்ளது.
கிருஷ்ணவேணியோ, சஞ்சய் காந்தியை இடைஞ்சலாக நினைத்துள்ளார். இதையடுத்து தனது மகனைக் கொன்றுவிட தீர்மானித்தார் பிரகாஷ். எனவே, அன்று இரவு யாருக்கும் தெரியாமல் சஞ்சய் காந்தியை கழுத்தை நெரித்துக்கொன்றார். பின்னர் அந்தக் கிராமத்திலேயே புதைத்து விட்டார்.
சில நாட்கள் கழித்து பிரகாஷின் உறவினர்கள் அவரிடம் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். அப்போது தனதுகுற்றத்தை பிரகாஷ் ஒத்துக் கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், தனது மகன் கொலை செய்யப்பட்டததை அறிந்த சசிகலா, பிப்ரவரி 5-ம் தேதி போலீஸில் புகார்கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தீவிரமாகத் தேடி பிரகாஷைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications