போர் விமானம் நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
பூஜ் (கட்ச்):
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள நாலியா விமானதளத்தில் சனிக்கிழமைமாலை விபத்துக்குள்ளானது.
இந்த விமானவிபத்து குறித்து உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கையில், கட்ச் மாவட்டம் நாலியா விமானதளத்தில் ஏற்பட்ட விமானவிபத்தில் விமான பைலட் பேடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கின்றன.
விமான விபத்து குறித்து கிடைத்த முதன்மைச் செய்திகள், சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மிக் 21 ரக விமானம், கட்ச் மாவட்டம் நாலியாவிமான தளத்திலிருந்து கிளம்பிய பின் பனாடா மற்றும் சையாசார் கிராமங்களுக்கிடையில் விபத்துக்குள்ளானது என்று கூறுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications