ஒரு விருது ஒரு சோகம்
தமாத்கா (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் தமாத்கா கிராமத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர் அப்துல் ரசாக் சிறந்தகைவினைக் கலைஞர் என்று விருது வாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனிடமிருந்து விருந்து வாங்கவுள்ள இந்த நேரத்தில் அவரதுகைவினைப் பொருட்கள் அனைத்தும் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் சேதமடைந்துள்ளன.
43 வயதாகும் கைவினைக் கலைஞர் அப்துலும், இவரது சகோதரர் இஸ்மாயில் முகமதுவும் சேர்ந்து துணிவகைகளுக்கு எம்பிராய்டரி மற்றும் சாயம் செய்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர். இவைகள் தவிரகையால் பல பொருட்களை வடிவமைத்துள்ளனர். இவர்களது குடும்பம் 9 தலைமுறைகளாக இந்தத் தொழிலைச்செய்து வருகிறது.
தற்போது இவர்களது கைவினைப் பொருட்கள் எல்லாம் பூகம்பத்தால் சேதமடைந்து கிடக்கிறது. இவர்களதுதாத்தாவும் 56 ஆண்டுகளுக்கு முன் கட்ச்சில் ஏற்பட்ட பூகம்பத்தில் தனது உடைமைகளையெல்லாம் இழந்தார்.அதே போன்ற துன்பத்தை தற்போது இவர்கள் சந்தித்துள்ளனர்.
அப்துல் ரசாக்குக்கு உதவி செய்யும் வகையில் ஊர் முழுவதும் ஒன்று திரண்டு இடிந்து போன அவர்களது வீட்டைக்கட்டிக் கொடுக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. தமாத்கா கிராமத்தில் வசித்து வரும் 3,000 குடும்பத்தினரும்பூகம்பத்தில் தங்களது உறவினர்களை, உடைமைகளை இழந்துள்ளனர். 125 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துதரைமட்டமாகியுள்ளன.
அப்துல் ரசாக்கின் வீடும், இன்னும் இரண்டு வீடுகளும் லேசாக சேதமடைந்துள்ளது. அவர் நடத்தி வந்த சாயத்தொழிற்சாலையும், கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலையும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
அப்துல் ரசாக் தவிர 30 க்கும் மேற்பட்ட பிற கைவினைக் கலைஞர்களின் வீடுகளும் கடுமையாகச்சேதமடைந்துள்ளன. மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் சேதமடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ 50 லட்சமாகும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications