எங்க நிபந்தனை என்னன்னா .. ராமகோபாலன்
காஞ்சிபுரம்:
கோவில் பசுக்களை ஏலம் விடாமல் தடுக்கும் வகையில் பசுக்கள் காப்பகம் அமைப்பது உள்பட எங்களது 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இந்து சமயக் கோவில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள்,மடாதிபதிகள், இந்துமத அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும்.
கோயில் பசுக்களை ஏலம் விடாமல் அரசே தனி நிலம் ஒதுக்கி பசு காப்பகங்கள் அமைக்க வேண்டும். இல்லையெனில், பசுவை காக்கமுன்வருவோரிடம் ஒப்படைக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு சாதகமாக உள்ள சென்னை மாநில கல்விச் சட்டத்தின் விதிமுறைகள் பெரும்பான்மைசமுதாயத்திறகும் சாதகமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லையில் கொலையுண்ட இந்து முன்னணி பிரமுகரின் குடும்பத்திற்கு உதவிய முதல்வருக்கு நன்றி. அது போல் ராமநாதபுரத்தில் கொலையுண்டவரின்குடும்பத்திற்கும் உதவ வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தி.மு.க எதிர்ப்பு நிலையிலிருந்து ஆதரவு நிலைக்கு மாறுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
மதுரை - காசி வரை உள்ள அகல ரயில் பாதையை ராமேஸ்வரம் - காசி வரை விரிவுபடுத்த வேண்டும். தேவாலயங்கள் கட்டிட அனுமதி பற்றிவிசாரிப்பதோடு, தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றார் ராமகோபாலன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications