ஒரு ஊர்வலம் .. ஒரு மோதல் ..
சேலம்:
சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், ஊர்வலம் நடத்திய அகில இந்திய நாடார் பேரவை தொண்டர்களுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
சேலத்தில் அகில இந்திய நாடார் பேரவையின் பேரணியும், மாநாடும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாகஇருந்தது. இந்த மாநாடில் கலந்து கொள்ள பெருந்திரளான மக்கள் சனிக்கிழமை முதலே சேலத்திற்கு வரத்தொடங்கினர். இவர்கள் தங்குவதற்காக திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் போன்ற பலஇடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில் பங்கு பெற வந்த ஒரு பிரிவினர் சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி மலை பகுதிக்கு சென்றனர்.அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் ரசிகர் மன்ற தட்டியை கிழித்தனர். இதன் காரணமாக விஜய்ரசிகர்களுக்கும், நாடார் சபை இளைஞர்களுக்கும் இடையேமோதல் ஏற்பட்டது.
அப்போது அடிவாரத்திற்கு ஒரு கும்பல் அரிவாள், உருட்டைக்கம்பு போன்றவற்றுடன் வந்து அங்கிருந்த வீடுகளின்உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வீட்டிலிருந்தவர்கள் பயந்து கதவை அடைத்துக்கொண்டனர். ஆனாலும் அந்த கும்பல் வீடுகளின் மீது கற்களால் தாக்குதல் நடத்தியது. இதில் ஓட்டு வீடுகள்சேதமடைந்தன.
இந்த வன்முறை தாக்குதலில் அங்கு வசிக்கும் கணேசன் (35) என்பவருக்கு தலையில் பலத்த அடி விழுந்தது. இதைதடுக்க வந்த அவரது மனைவி செல்வி(29) மீதும் தாக்குதல் நடந்தது. அதில் அவர் கை எலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. பூட்டபட்ட கடைகள் மீதும் கல்லெறியப்பட்டது.
இந்த கும்பல் மாநாடு நடக்கவிருந்த இடமான போஸ் மைதானத்தை நோக்கி சென்றது. அங்கு செல்லும் வழயில்எம் 80 -ல் வந்து கொண்டிருந்த வாகனத்தில் வந்தவரை தாக்கியது.அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவர் வந்த வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் பாதிஎரிந்திருந்த வாகனத்தை கைப்பற்றி டவுன் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
தாக்கப்பட்ட வாலிபர் பெயர் பாலமுருகன் (32) என்பதும், இவர் சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும்தெரியவந்தது. இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்ததும் தெரிய வந்தது. இந்த செய்தியை அறிந்த புதியநீதிக்கட்சியினரும் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெரும் வன்முறை வெடிக்கும் அபாயத்தை உணர்ந்த போலீசார் மாநாடு நடக்க இருந்த மைதானம் முழுவதும்அதிரடிப்படையினரை குவித்தனர். மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மாநாட்டுக்கு வந்துகொண்டிருந்த வாகனங்கள் பத்திரமாக மாநாடு நடந்த இடத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டன. மைதானத்திலிருந்துஎந்த வாகனமும் வெளியே செல்ல அனுமதியளிக்கப்படவில்லை.
அம்மாப்பேட்டையிலிருந்து கிளம்புவதாக இருந்த பேரணிக்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆயினும் சேலத்தில் ஜாதிமோதல் ஏற்படுமோ என்ற அச்சமும், பதட்டமும் நிலவி வருகிறது. அதிக அளவில் போலீசார் பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications