வாக்காளர் பட்டியல் .. புதுவை கட்சிகள் புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பாலன் கூறுகையில், பாண்டிச்சேரியில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் பல்வேறு முறைகேடுகள்நடந்துள்ளன. இதுகுறித்து விசாரிப்பதற்காக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
வீடுகள் பூட்டியிருந்தது என்ற சாதாரண காரணத்திற்காக வாக்காளர் பட்டியலிலிருந்து பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதைத.மா.கா. ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன் கூறுகையில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவாக்காளர்கள் பெயரை உடனடியாக சேர்க்க வேண்டும். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், பாண்டிச்சேரி அ.தி.மு.க.தலைவருமான ராமச்சந்திரன், குனிச்சம்பேட் கிராமத்திலுள்ள 156 வாக்காளர்களின் பெயர்கள்நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பாண்டிச்சேரி தி.மு.க. அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஆர்.வி.ஜானகி ராமனும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றுகூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications