தேர்தலில் போட்டியிட மாட்டார் நாயனார்?
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வராக இருப்பவர் என்ற பெருமையுடைய முதல்வர் ஈ.கே.நாயனார் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் 2 நாட்கள் கூட்டம் புதன்கிழமை துவங்குகிறது.வியாழக்கிழமை கூட்டத்தில் விவாதித்த கருத்துக்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
அப்போது முதல்வர் நாயனார் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது குறித்தும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், கேரளசட்டசபைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்பது குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சிதெரிவித்துள்ளது.
கேரள முதல்வர் நாயனாருக்கு வயது 81. இவர் 1980 - 81 மற்றும் 1987 - 91 ல் கேரள மாநில முதல்வராக இருந்தார். 1996 ல் மூன்றாவதுமுறையாக கேரள மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ள இடது ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்து வருகிறார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் முடிந்ததும் நாயனார் சார்பில் தேர்தலில் நிற்கும் அடுத்த வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படும்.
இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பாளராக இருக்கும் அச்சுதானந்தன் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கேரள மாநில செயலாளர் பின்னராயி விஜயனும் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications