விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்க திட்டம்
திருச்சி:
விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்கும் பொருட்டு புதிய விளையாட்டு கொள்கை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்தப்படும்என்று மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசியபோது, இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் ஒன்றை சென்னையில் அமைப்பதற்காக 50 ஏக்கர் நிலத்தை அளிக்ககோரப்பட்டுள்ளது. மேலும், நாகர்கோவிலில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் ஒன்று அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதுபோல 80 மையங்கள் நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 382 பள்ளிள் உள்பட நாடு முழுவதும் 5000 பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிக்க மத்திய அரசின் உதவியை பல மாநிலங்கள்கோரியுள்ளன. தமிழகத்திற்கு இதுவரை 32 பள்ளிகளுக்கு தலா ஒன்றரை லட்ச ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு அளித்துள்ளது.
நாடு முழுவதும் 80 மாவட்டங்களில் தேசிய மறுசீரமைப்பு படை அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், சென்னை, திருச்சி, கன்யாகுமரி,காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் இது அமையும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications