நோயாளிகளுக்கு அபின் வழங்க கோரிக்கை
கோவை:
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அபின் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என அமைச்சருக்கு 14 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் ஆஸ்துமா நோய்க்கு மருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இந்த மருந்து விநியோகத்தை அரசு திடீர் என தடை விதித்தது.இந்த தடையையடுத்து , நஞ்சப்பன், குருசாமி, பரமானந்தன், மாணிக்கம் உள்பட 14 நோயாளிகள் மாநில அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு அளித்தகோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது;
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக அபின் எனப்படும் ஓபியம் வகை மருந்து எங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்துஒவ்வொரு மாதம், 10 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு நபருக்கும் 20 கிராம் முதல் அதிகபட்சமாக 45கிராம் வரை மாதம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அரசு உத்தரவின் படி இம்மாதம் முதல் இந்த மருந்து வழங்குவதைநிறுத்தி விட்டனர்.
இந்த மருந்து இல்லாமல் எங்களால் நடக்கவோ, வேறு வேலைகளோ செய்ய இயலாது. மருந்துப் பற்றாக்குறையால் ஏற்கனவே ஆத்துப்பாலத்தைச்சேர்ந்த அப்துல் சமது என்பவர் இறந்து விட்டார். இந்த நிலையில் எங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இதனை நிறுத்தி விட்டால், நாங்கள் உயிர் வாழ்வதுகேள்விக்குரியாகி விடும். எனவே, தயவு கூர்ந்து சுகாதார அமைச்சருடன் பேசி, மீண்டும் இம்மருந்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் எனமனுவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications