புலிகளுக்கு ஆதரவாக தமிழர் இயக்கங்கள்
கொழும்பு:
இங்கிலாந்து தடை விதிக்கவுள்ள தீவிரவாதிகளின் பட்டியலில் விடுதலைப் புலிகளை சேர்க்க வேண்டாம் என்று இலங்கை தமிழ்க் கட்சிகள் இங்கிலாந்தைக்கேட்டுக் கொண்டுள்ளன.
கொழும்பில் இதுபற்றி கூறிய இலங்கைக்கான பிரிட்டன் தூதரக அதிகாரிகள், ஒரு முஸ்லீம் கட்சி உள்பட 9 தமிழர் கட்சிகள் இங்கிலாந்து பிரதமருக்குஅனுப்பக் கோரியுள்ள கடிதத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்க கோருபவர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்எனக் கூறியுள்ளனர்.
டெலோ, டி.யு.எல்.எப் உள்ளிட்ட தமிழர் இயக்கங்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தூதரகங்களுக்கும் சென்றுவிடுதலை புலிகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவு தர வேண்டாம் எனக் கோரியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால், இலங்கையில் நார்வே தூதுக்குழு மேற்கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கும் என்றுவிடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகளின் இயக்கம் தடைசெய்யப்பட்டால் இலங்கையில் உள்நாட்டுப் போர் மூளும். அது நாட்டை பாதிக்கும் என எதிர்க் கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி.சந்திரசேகரன் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications