பலே கொள்ளையர்கள் கைது
டெல்லி:
பல மாநிலங்களில் கொள்ளையடுத்த கும்பல் ஒன்றை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி டெல்லியின் கூடுதல் போலீஸ் கமிஷனர் கமார் அஹமது கூறுகையில், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் பலகொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளோம்.
கொள்ளைக் கும்பலின் தலைவராக செயல்பட்ட ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளியன்று வட கிழக்கு டெல்லி பகுதியில் பெயின்ட் லாரி ஒன்றில் தப்பிசெல்லும் போது பிடிபட்டார். அவரை விசாரித்த போது அவருடைய கூட்டாளிகள் வியாழனன்று டெல்லி வருவது தெரிய வந்தது.
அதனையடுத்து அவர்களை பிடிக்க முயற்சித்த போது தப்பிக்க முயன்ற 6 பேரையும் போலீசார் விரட்டி பிடித்தனர். இதுவரை இவர்கள் கொள்ளையடித்தபொருட்களின் மதிப்பு 1.7 கோடியாகும். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications