வெடிகுண்டு இல்லை .. கோவை கமிஷனர் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் பிரதமர் வாஜ்பாய் செல்லவுள்ள கண்காட்சி வளாகப் பாதையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் வதந்தி என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் வியாழக்கிழமைதெரிவித்தார்.
முன்னதாகக் கோவைக்கு பிரதமர் வாஜ்பாய் பிப்ரவரி 16 ம் தேதி வருகிறார். இதனையொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதேசி விழிப்புணர்வு பொருட் கண்காட்சி நடக்கும் கொடீசியாபொருட்காட்சி வளாகத்திற்குச் செல்லும் பாதையில் வியாழக்கிழமை அதிகாலை போலீசார் சோதனைமேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜெலட்டின் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
இந்தப் பாதையில் ஒன்றரை அடி ஆழத்தில் 4 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆர்.டி.எக்ஸ் வகை மருந்தும் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications