பூகம்பத்திலிருந்து மீள ரூ 175 பில்லியன்
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ரூ 175 பில்லியன் தேவைப்படும் என்று மாநில முதல்வர்கேசுபாய் படேல் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை தலைநகர் காந்திநகரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச், அகமதாபாத், ராஜ்கோட், ஜாம்நகர், சுரேந்திரநகர் மற்றும் பேடன் ஆகியமாவட்டங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்தது. மொத்தம் 229 கிராமங்கள் அழிந்து போயின.
கிராமங்களில் பாதிக்கப்பட்டவர்களை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று அவர்களைத் தங்க வைப்பதற்கு மட்டும் ரூ 7 பில்லியன் செலவாகும். நிவாரணநடவடிக்கைகள் நடந்து வருகிறது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பூஜ், பச்சாவ், ரப்பார், அஞ்சார், ஆகிய நகர்களைச் சீரமைக்க பல கோடி ரூபாய்தேவைப்படும்.
நான் கடந்த வாரம் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் பூகம்பநிவாரணம் தொடர்பான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி கூறினார்கள்.
குஜராத் மாநிலத்தில் தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்த மக்களுக்காக மட்டும் மாநில அரசு ரூ 75 பில்லியன் கொடுக்க வேண்டும்.இதுகுறித்து ஆய்வு செய்ததில் மாநில அரசு ரூ 175 பில்லியனுக்கு மேல் செலவு செய்ய வேண்டி வரும் என்று கணக்கிட்டுள்ளது.
மாநில அரசு வரும் ஜூன் மாதத்திற்குள் வறுமைக்கோட்டிற்குள் வாழும் 1.5 மில்லியன் மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கத்திட்டமிட்டுள்ளது. மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ 40, 000 முதல் 90,000 வரை வீடு கட்ட நிதியுதவி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது என்றார் முதல்வர்கேசுபாய் படேல்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications