மணிப்பூர் முதல்வர் பதவியேற்பு
இம்பால்:
மணிப்பூரில் புதிய முதல்வராக மக்கள் முன்னணி தலைவரும், சமதா கட்சித் தலைவருமான ராதா பினோத் கொய்ஜாம் வியாழக்கிழமை பிற்பகல்பதவியேற்றார்.
மணிப்பூர் மாநில கவர்னர் பிரகாஷ் மார்வா, ராஜ்பவனில் நடக்கும் எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்வருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும்செய்து வைத்தார். மணிப்பூரில் முதல்வர் பினோத் கொய்ஜாம் மட்டும் வியாழக்கிழமை பதவியேற்றார்.
பதவியேற்றபின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றார்.
முன்னதாக, மணிப்பூர் முதல்வர் நிபாமாச்சா சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வேத் மார்வாவிடம் செவ்ாய்க்கிழமை மாலை சமர்ப்பித்தார். இதையடுத்து மாநில சமதா கட்சித் தலைவர் ராதா பினோத்கொய்ஜாம் அடுத்த முதல்வராகிறார்.
அடுத்த அரசை அமைக்க ஆளுநரிடம் ராதா பினோத் சார்ந்துள்ள ஐக்கிய ஜனநாயக கூட்டணி உரிமை கோரியிருந்தனர். செவ்வாய்க்கிழமை மதியம் எதிர்கட்சியைச் சேர்ந்த 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர் கட்சியிலிருந்து விலகி நிபாமாச்சா சிங்கின் மணிப்பூர் மாநில காங்கிரசில் இணைந்தனர்.
அதன்பின்பு ஏற்பட்ட உடன்பாட்டின் படி நிபாமாச்சா சிங் பதவியிலிருந்து ராஜினாமா செய்து சமதா கட்சியின் ராதா பினோத் கொய்ஜாம் அரசு அமைக்கவழி வகுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications