தமிழ்த் தீவிரவாதி மாறன் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய தமிழ்த் தீவிரவாதி மாறனை அதிரடிப்படை போலீஸார்புதன்கிழமை இரவு சிறுவாணி காட்டுப்பகுதியில் கைது செய்தனர்.
தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர் மாறன். இவர் ராஜ்குமார் கடத்தலில் வீரப்பனுக்கு பெரியஅளவில் உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், சிறுவாணிக் காட்டுப் பகுதியில் மாறனை சுற்றி வளைத்ததும் அவர்சரணடைந்தார். மாறனை நாங்கள் கைது செய்த போது வீரப்பனின் இன்னொரு கூட்டாளியையும் கைது செய்தோம்என்றனர்.
முன்னதாக, தமிழக அரசு, மத்திய அரசிடம் தீவிரவாதிகள் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications