அதிரடிப்படையின் கொடுமைகள்
திருச்சி:
வீரப்பனை பிடிக்க அனுப்பப்பட்ட அதிரடிப்படை, அங்குள்ள மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளை விசாரிக்க உயர்நிலை விசாரணைக் குழு ஒன்றைஅமைக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் நிருபர்கள் கூட்டத்தில் பேசிய போது, கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவித்தபோதே இது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டது. ராஜ்ய சபாஉறுப்பினரான பத்திரிகையாசிரியர் சோ ராமசாமி கூறியது போல் வீரப்பன் தேடுதல் வேட்டை பற்றிய பல உண்மைகள் வெளியில் கொண்டு வரப்படவேண்டியுள்ளது.
கர்நாடகா சிறையில் விசாரணையின்றி கடந்த 8 வருடங்களாக உள்ள 51 தடா கைதிகளின் மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் துவக்கியுள்ளது. விரைவில்அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இது தொடர்பாக அதிரடிப்படை அதிகாரிகள் விசாரிக்கப்படுவது அவசியம். இதனிடையே, தடா கைதிகளின் விடுதலைகோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிரடிப்படை நடவடிக்கைகள் ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டும். அதிரடிப்படையினர் பத்திரிகையாளர்களையோ, மனித உரிமை போராட்டக்குழுவினரையோ தேடுதல் பணி நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அப்பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்ல தமிழககர்நாடக அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீரப்பன் விவகாரத்தை சட்ட ஒழுங்கு பிரச்சினையாக கருதாமல் சமுதாய கண்ணோட்டத்தில் காண வேண்டும். இதுவரை நடத்திய வீரப்பன் தேடுதல்வேட்டையில் இரு அரசுகளும் 180 கோடிரூபாய் செலவழித்துள்ளதோடு அங்குள்ள மக்களுக்கும் அதிக பாதிப்பை அளித்துள்ளது.
போராட்டக் குழுக்கள் : தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு போராட்டக் குழுக்களை தடை செய்வதின் மூலம் அவர்களை அழிக்க முடியாது. அதற்கு பதில்இளைஞர்கள் போராட்ட பாதையில் செல்வதற்கான காரணத்தை அறிந்து அதனை நீக்க தமிழக முதல்வர் முயல வேண்டும்.
இலங்கைப் பிரச்சினை: இந்தியாவின் எதிரி இலங்கை என்ற கண்ணோட்டத்தில் பாகிஸ்தானும், சீனாவும் அந்நாட்டிற்கு ஆயுத சப்ளை செய்வதை அறிந்துகொள்ளாமல் வாஜ்பாய் அரசு இலங்கைக்கு போர்க் கப்பலை விற்றிருக்கிறது என்று நெடுமாறன் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications