விபச்சாரத்துக்குப் பலியாகும் குஜராத் பெண்கள்

Subscribe to Oneindia Tamil

பூனா:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளையும், பெண்களையும் ஆசை வார்த்தை கூறிமும்பைக்கு அழைத்து வந்து அவர்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தும் அவலம் நடந்து வருவது தெரியவந்துள்ளது.

இது மும்பையில் பிரபலமான அஹமது நகர் பகுதியில் நடந்து வருகிறது. இதைத் தெரிந்து கொண்ட சமூக சேவைநிறுவனம் மற்றும் மாதர் சங்கங்கள் இந்த அவலத்தை கண்டித்துள்ளன.

இது குறித்து, புத்வார் பெத் என்ற பெண்கள் அமைப்பினர் மும்பையில் வியாழக்கிழமை கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில், தரகர்களால் குஜராத்திலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்படும் பெண்களைக் காப்பாற்ற வேண்டும். இதுகுறித்து உடனடியாகப் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகள் தொடரக் கூடாது. பொதுவாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்களேஅதிகம் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் கல்வியறிவு இல்லாத காரணத்தாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் இதுபோன்ற செயல்களைச் செய்யுமாறு தூண்டப்படுகின்றனர்.

மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக சேவை அமைப்புக்கள் உதவி புரிய வேண்டும்.தரகர்கள் போன்று செயல்படும் நபர்கள் அறியாமை இல்லாத பெண்களை தங்கள் சூழ்நிலைக்குச் சாதகமாகப்பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மேலும் பூகம்பத்தால் வீடுகள், உடைமைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் இழந்த பெண்கள்என்ன செய்வது என்று தெரியாமல் இது போன்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு விடுகிறார்கள். இதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+