பா.ஜ.க., தி.மு.க. கூட்டணி தொடரும்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, தி.மு.க. கூட்டணி தொடரும் என்று மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்வெங்கையா நாயுடு வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய கிராம்பபுற மேம்பாட்டுத் துறை அமைச்சரும், மூத்த பா.ஜ.க. தலைவருமான வெங்கையா நாயுடு வியாழக்கிழமை நிருபர்களிடம்கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி தொடரும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.
பா.ஜ.க. தலைவர் ஒருவர் முதன் முதலாக அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. தேர்தல் கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. கூறியதை ஒப்புக் கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள வேறு கட்சிகள் மூலம் முயன்று வருவதாக கூறப்பட்டது.
பிரபல பத்திரிக்கையாளரும், பா.ஜ.க.வின் ஆதரவாளருமான சோ ராமசாமி ஜெயலலிதாவுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியது கூட அவர் பா.ஜ.க.,அ.தி.மு.க.வுக்கு இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டை மாற்றி மீண்டும் அவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியே என கூறப்பட்டது.
தமிழக முதல்வர் கருணாநிதியும் மத்திய அமைச்சர்கள் அ.தி.மு.க., பா.ஜ.க. உறவுக்கு முயன்று வருகிறது. பா.ம.க.வுக்கு பா.ஜ.க.வின் மீது எந்தகசப்புணர்வும் கிடையாது. அவர் தே.ஜ. கூட்டணியிலிருந்து விலகியதற்கு வேறு பல காரணஙகள் உள்ளது என கூறினார்.
அவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணி பல மாறுபட்ட கருத்துகளின் மொத்த உருவமாக காணப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என குற்றம் சாட்டிவந்தது. ஆனால் இப்போது அந்த கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் காங்கிரசும் சேருகிறது
பாட்டாளி மக்கள் கட்சி விடுதலை புலிகளுக்கு ஆதரவளிப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா முன்பு கூறியிருந்தார்.ஆனால் அவர் இப்போது அந்த கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மீது குற்றப்பத்திரிக்கைள் மட்டுமே தாக்கல் செய்ப்பட்டிருந்த போது இடது சாரி கட்சிகள் ஊழல் செய்த ஜெயலலிதாவுடன் கூட்டணிஅமைத்திருப்பதாக பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர், மேலும் இரண்டு மத்தியஅமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என இடது சாரியினர் கூறி வருகிறார்கள். ஆனால் இவர்கள் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்பும்அவருடைய கூட்டணியில் இருக்கிறார்கள்.
ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதியானதல்ல. மேல் கோர்ட்டுகள் அதை முடிவு செய்யும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு











Click it and Unblock the Notifications