பிரதமர் கோவை வருகை .. பாதுகாப்பு தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பிரதமர் வாஜ்பாயின் கோவை விஜயத்தின் போது சமூக விரோத சக்திகளால் அசம்பாவிதம் நிகழக் கூடும் என்றுகிடைத்த தகவலையொட்டி கோவை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நகரில் பதட்டமான பகுதிகளில் 3,000 போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு செக்போஸ்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் பிரதமர் ஸ்வதேசிதொழில் கண்காட்சியை,கோடிசியா தொழல்கண்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார். பிரதமர் விமான நிலையத்திலிருந்து கண்காட்சிநடக்கும் இடத்திற்கு நேரடியாக வருகிறார் என கூறினார்.

கண்காட்சியை திறந்து வைத்த பின் பிரதமர் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.அதன் காரணமாக வ.உ.சி பூங்காவுக்கு வரும் சாலை முழுவதும் போலீசாரால் தடுப்பு வேலிஅமைக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் பிரதமர் 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில்காயமடைந்த சிலரை பார்த்து பேசவிருக்கிறார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+