மாஸ்டர் பிரெய்ன் மாறனின் பின்னணி
சென்னை:
தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவரும், வீரப்பனின் கூட்டாளியுமாகச் செயல்பட்டு வந்த மாஸ்டர் பிரெய்ன் மாறன் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.
1991 ம் ஆண்டு புத்தூர் போலீஸ் நிலையத்தைத் தாக்கியது, 1993 ம் ஆண்டு கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தைத் தாக்கியது, 1997 ம்ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தைத் தாக்கியது உள்பட பல வழக்குகள் இவர் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவைகள் தவிர விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தர்மபுரியில் மின் டிரான்ஸ்பார்மரை குண்டு வைத்துத் தகர்த்ததுஆகியவற்றிலும் முக்கியமாகச் செயல்பட்டவர் மாறன்.
இறுதியாக கன்னடத் திரைப்பட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விஷயத்தில் வீரப்பனுக்கு அனைத்து உதவிகளையும் செய்து மாஸ்டர் பிரெய்னாகச் செயல்பட்டவர் இவர்.
வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய மாறனைப் பிடிப்பதற்குப் போலீஸார் தீவிரம் காட்டி வந்ததோடு மட்டுமல்லாமல் மாறனின் தலைக்குப்பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோவை அருகே வெள்ளியங்கிரி காட்டுப்பகுதியில் அதிரடிப்படை போலீஸ் துணை சூப்ரிடென்டன்ட் சம்பத் குமார் தலைமையில் 40 பேர் அடங்கியபோலீஸ் படையினர் மாறனைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
