கிரிக்கெட் குழப்பத்தை விசாரிக்கிறது கென்ய அரசு
நைரோபி:
கென்ய கிரிக்கெட் உலகில் நிலவும் குழப்பங்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் கடானா காலா உத்தரவிட்டுள்ளார்.
அதிக சம்பளம், மருத்துவ வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை கென்ய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் முன் வைத்திருந்தனர். இதனை ஏற்கமறுத்த வாரியம், இக்கோரிக்கைக்காக போராடுவோம் என்று வீரர்கள் கூறியதால் கென்ய அணியிலிருந்து 11 வீரர்களை நீக்கியதோடு இந்தியாமற்றும் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளவிருந்த 2 மாத சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்தது.
இது குறித்து விசாரிக்க 6 நபர் கமிஷனை நியமித்த அரசு, கமிஷனின் விசாரணை முடியும் வரை கென்ய கிரிக்கெட் வாரியம் கூட்டங்கள் நடத்த தடைவிதித்துள்ளது.
வாரியத்தை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும் இது என்று வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. நீக்கப்பட்ட அணித் தலைவர் மோரிஸ்ஒடும்பே, அரசின் முடிவை வரவேற்றுள்ளதோடு, விரைவில் விசாரணையை முடித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றார்.
பல்வேறு மாகாண கிரிக்கெட் கவுன்சில்கள் கோரியது போல் வாரியத்தின நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications