சோனியா வருகை ..மயிலாடுதுறையில் பாதுகாப்பு
நாகப்பட்டினம்:
விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து வருகிறது எனக் கோரி அவர்களுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் காங்கிரஸ் மாநாடு நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா சனிக்கிழமை வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகள் பற்றி நாகப்பட்டின மாவட்ட எஸ்.பி அபய்குமார் சிங் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,சென்னையிலிருந்து சோனியா காந்தி ஹெலிகாப்டர் மூலம் சனிக்கிழமை மாலை மயிலாடுதுறை வருகிறார். ஹெலிகாப்டர் ராஜன் தோட்டத்தில்வந்திறங்கும்.
பின் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் மாநாடு நடைபெற இருக்கும் ஞானாம்பிகை பெண்கள் கல்லூரிக்கு செல்கிறார். 5 மாவட்ட கண்காணிப்பாளர்கள், 15 துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாடு நடைபெற இருக்கும் இடத்திற்கு அருகில் குடியிருப்போரிடம் அவர்கள் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது.
லாட்ஜ்கள் மற்றும் திருமண மண்டபங்கள் சோதனையிடப்படுகிறது மயிலாடு துறைக்குள் வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின் தான்அனுமதிக்கப்படுகிறது.
வி.ஐ.பி.களுக்கு அடையாள அட்டை காவல் துறையினரால் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள்வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications