அ.தி.மு.க.வில் இளைஞர் காங். தலைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக இளைஞர் காங்கிரசின் மூத்த துணை தலைவர் கராத்தே தியாகாரஜன் காங்கிரசிலிருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேசினார். அதன் பின் அவர்அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது சேவைகள் காங்கிரசால் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. எனவே நான் அக் கட்சியிலிருந்துவிலகி அ.தி.மு.க.வில் இணைந்தேன் என கூறினார். அவருடம் மேலும் பலரும் காங்கிரசிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications