கனவு பலிக்கவில்லை .. ரஷ்ய தொழிலதிபரானார்
மாஸ்கோ:
இந்தியாவிலிருந்து விஞ்ஞானியாக வேண்டும் என்று பல வண்ணக் கனவுகளுடன் 1977 ம் ஆண்டு ரஷ்யா சென்ற டெல்லியைச் சேர்ந்தவர் தற்போதுரஷ்யாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய தொழிலதிபராகி விட்டார்.
அவர் பெயர் சுதிர் குப்தா. வயது 42. டெல்லியைச் சேர்ந்த இவர் 1977 ம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றார். விஞ்ஞானியாக வேண்டும் என்றகனவுடன் சென்ற அவர், தற்போது பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி. விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு பலிக்காத காரணத்தால் பாதைமாறி தொழிலதிபராகிவிட்டார் குப்தா.
ரஷ்யாவில் தேயிலை, மினரல் வாட்டர், காபி, வோட்கா மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனையில் இவரது நிறுவனம் கொடிகட்டிப் பறக்கிறது.இதனால் ரஷ்ய பொருளாதாரத்துக்கும் நல்ல வளர்ச்சி கிடைக்கிறது.
இதுகுறித்து குப்தா என்ன கூறுகிறார்?
19 வயதாகும் போது சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதனால் ரஷ்யாவுக்கு வந்தேன். அப்போது அதிபராக இருந்தகோர்ப்பசேவ் அறிமுகப்படுத்திய, எதிர்கால வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி என்ற திட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.
அவரது, திட்டப்படி எனது கொள்கையை மாற்றிக் கொண்டேன். ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியுடன் செயல்பட்டேன். அப்போதுஇளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் கோர்ப்பசேவ் அறிமுகப்படுத்திய திட்டப்படி, அரசிடம் கடன் வாங்கி சிறிய அளவிலான தொழில் தொடங்கினேன்.
இதற்கிடையே வேளாண் அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றேன். இது எனது தொழிலுக்கு மிகவும் உதகரமாக இருந்தது.தொழிலையும் கவனித்துக் கொண்டு, மிகப்பெரிய ரஷ்ய ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தேன்.
அப்புறம் படிப்படியாக முன்னேறினேன். தற்போது கிரோவ், வோல்ஸ்கி, ரோஸோவா, செரிநிக் போன்ற பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம்நாங்கள் கொடுக்கும் பொருட்கள விரும்பி வாங்குகிறார்கள். ரஷ்யாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்திலும் எனது பங்கு உள்ளது என்றார்.
குப்தாவுக்கு ரஷ்யா நாட்டுப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய அளவு பங்குண்டு என்று அந்நாட்டுப் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது மக்கள்நண்பர் பல்கலைக் கழகத்தையும் இவர் நடத்தி வருகிறார். இதில் 40 சதவீதம் இந்திய மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications