மாணவர்கள் தலைமையில் பசுமை ராணுவம்
தூத்துக்குடி:
பொதுமக்களுக்கு சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அடுத்த மாதம், நாடு முழுவதிலிருந்தும் 20 லட்சம் மாணவர்களைக்கொண்ட பசுமை ராணுவம் அமைக்கப்படும் என மத்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் டி.ஆர் பாலு சனிக்கிழமைதெரிவித்தார்.
திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்து பேசுகையில் அமைச்சர் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலுள்ள பள்ளிகளிலிருந்தும் 50 முதல் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் அனைவருக்குமான பயிற்சி திட்டம்ரூ 10கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றார்.
அமைச்சர் அடிக்கல் நாட்டிய பாதாள சாக்கடை திட்டம் ரூ 9 கோடி செலவில் கடல் மாசுக்களை கட்டுப்படுத்தவும், சுற்றுப்புற சூழலைகாப்பாற்றவுமாகும். தமிழக அரசின் நிதியுதவியுடன் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் இது செயல் படுத்தப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications