காஷ்மீரில் மீண்டும் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?
டெல்லி:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிப்பதற்காக மத்தியஅமைச்சரவை பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கூடி விவாதிக்கிறார்கள்.
ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நவம்பர் 28 ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இது பின்னர் ஜனவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. அதற்குப்பின் மீண்டும் பிப்ரவரி 26 ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது மீண்டும் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக்அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர்விவாதித்தனர். அப்போது பரூக் அப்துல்லா கூறுகையில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுவது நல்லதுதான். அதற்குநாங்கள் ஆதரவு தருவோம்.
ஆனால் தீவிரவாதிகளும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். லஸ்கார் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின்தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை மாலைமத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் கமிட்டி சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்துவிவாதிக்கப்படும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications