இனி கம்ப்யூட்டர் யுகம்தான் .. மத்திய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

கோவை:

அடுத்த 2005 ம் ஆண்டில் ஆண்டுக்கு 3 லட்சம் கம்ப்யூட்டர் நிபுணர்கள் உருவாகுவர். அப்போது இந்தியாவின்தேவை மட்டுமல்ல, உலக நாடுகளின் கம்ப்யூட்டர் நிபுணர்களின் தேவை பூர்த்தியடையும். இந்தியா ஒரு "ஜகத் குருவாக அப்போது திகழும் என பிரமோத் மகாஜன் தெரிவித்தார்.

கோவையில் நடந்து வரும் சுதேசி விழிப்புணர்வு கண்காட்சியில் கலந்து கொண்டு பிரமோத் மகாஜன்பேசியதாவது:

கணிப் பொறியாளர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்குச் செல்கின்றனரே என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை. இனி வரும் ஆண்டில் ஒரு லட்சம் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் உருவாக்கப்ட்டு வருகின்றனர்.

அடுத்த ஆண்டில் இது இரட்டிப்பாகும். அடுத்த 2005ம் ஆண்டிற்குள் இது 3 லட்சமாக உயரும். அப்போதுஉள்நாட்டுத் தேவை மட்டுமின்றி உலக நாடுகளின் தேவையும் இந்திய நிபுணர்களால் பூர்த்தி செய்யப்படும்.

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதனால் வல்லரசு என்பதை நிரூபித்துள்ளது. இதே போல் கடந்தகாலத்தைப் போலவே, மீண்டும் உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரு உலக மாகக் குருவாக (ஜகத் குரு) திகழும்.

கோவையில் மென்பொருள் பூங்கா உருவாக வேண்டும் என இங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அடுத்த இரண்டு வாரங்களில் இங்கு மென்பொருள் பூங்கா உருவாக்கத் திட்டம் வகுக்கப்படும். எப்போதுமே ஒருதொழில் வளர்ச்சியை இரண்டு நிகழ்ச்சிகளை வைத்து அதன் உயர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

முதலாவது பங்குச் சந்தை., இரண்டாவது ஒரு பெண் எப்படிப்பட்ட, எந்த வேலையில் உள்ள ஆண் மகனை மணக்கவிரும்புகின்றனர் என்பது. இந்த இரண்டில் நமது நாட்டில் உள்ள பெண்களில் 38 சதவீதம் பேர் மென்பொருள்வல்லுநர்களையே மணக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார் மகாஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+