கேரளாவில் மீண்டும் நிலநடுக்கம்
கொல்லம்:
கேரள மாநிலம் கொல்லம், ஆலப்புழா மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சனிக்கிழமையும் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் சுமார் 75 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. வீடுகளின் கண்ணாடிஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கட்டில்கள் உருண்டு விழுந்தன.
திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினார்கள். குறிப்பாக கொல்லம் மாவட்டம்கருநாகப்பாளை, தொடியூர், குலசேகரபுரம், பன்மானா, சாஸ்தம்கோட்டா, குமரச்சிரா, சோரநாடு, பத்தாரம் மற்றும் அயாத்தில் ஆகிய கிராமங்களில்நிலநடுக்கத்தின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.
சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் தூசு படிந்த அங்குள்ள கிணற்று நீரைச்சுவாசித்தவர்கள் மயக்கமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications