காவிரி பிரச்சனை .. தீர்த்து வைப்பாரா சோனியா?
சென்னை:
தமிழக - கர்நாட மாநிலங்களுக்கிடையே நெடு நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி பிரச்சனையைத் தீர்க்க மத்திய காவிரி நதிநீர் ஆணையத்திடம்முறையிடுவேன் என்று சோனியா காந்தி கூறியதற்கு, சோனியா தீர்த்து வைத்தால் சந்தோஷப்படலாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அங்குபொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, காவிரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், விரைவில் இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் காவிரி நதீநீர் ஆணைய அதிகாரிகளை சந்தித்துப் பேசுவேன் என்று கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனையை இவர் தீர்த்துவைத்தால் அதிகம் சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன். காவிரி பிரச்சனையில் காவிரி நதிநீர் ஆணையத்தின்தீர்ப்பை ஒத்துக் கொள்ள கர்நாடக அரசுதான் மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் இழுத்தடிப்பது கர்நாடக அரசுதான். தமிழகத்துக்கு205 டி.எம்.சி.தண்ணீர் விடுவதில் கர்நாடக அரசுதான் காலம் தாழ்த்தி வருகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் இந்த நேரத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தைச் சந்தித்துப் காவிரி நீர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன் என்றுகூறியுள்ளார் சோனியா காந்தி.
காவிரி நதிநீர் ஆணையத்தைச் சந்தித்துக் கூறுவதை விட்டு விட்டு கர்நாடக அரசிடம் காவிரி நீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கசோனியா காந்தி முயற்சி செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications