ஜெ.வுடன் பேச காங். தூதர்கள் மீண்டும் வருகை
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் பிரணாப் முகர்ஜியும், குலாம் நபிஆசாத்தும் ஞாயிறன்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.
அவர்கள் திங்களன்று த.மா.கா. தலைவர் மூப்பனார் மற்றும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்த பின்பிற்பகல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத்தும், பிரணாப் முகர்ஜியும் இதனைதெரிவித்த அவர்கள் ஜெயலலிதாவுடனான பேச்சுவார்த்தையின் போது கூட்டணியில் விடுதலை புலிகள்ஆதரவாளர்களான பா.ம.க.வை சேர்த்தது பற்றியும், தொகுதிப் பங்கீடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றனர்.
டெல்லியில் ஆசாத்தும், மயிலாடுதுறை கூட்டத்தில் சோனியாவும் பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்ததுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனை கேள்வியுற்ற ஜெயலலிதா, காங்கிரஸூடன்தொகுதி பங்கீடு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட மாட்டாதுஎன செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. அளிப்பதாக அறிவித்துள்ள 40 தொகுதிகள் த.மா.கா.வை விரைவில் கூட்டணி பேரம் முடிக்க உதவும்எனக் கருதப்படுகிறது. காங்கிரஸூக்கு தற்போதைய சட்டசபையில் உறுப்பினர்கள் எவரும் இல்லையென்றாலும்,அதற்காக குறைவான தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்க மறுக்கக்கூடும்.
பாண்டிச்சேரியில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ், அங்கு ஆட்சி அமைக்க விரும்பும்பா.ம.க.வும் ஒரே கூட்டணியில் இருப்பதால் இது குறித்தும் காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் த.மா.கா.விற்கு இருக்கும் வழிகளில் ஒன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது அல்லது 3வது அணி அமைப்பது தான். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது குறித்து இரண்டு கட்சிகளும் என்ன முடிவுஎடுக்கும் என்பது தற்போதைக்கு தெளிவாக தெரியவில்லை.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications