சோனியாவின் தூதர்கள் மூப்பனாருடன் சந்திப்பு
சென்னை:
தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்த சென்னை வந்தகாங்கிரஸ் தலைவர்கள் பிரனாப் முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனாரைச் சந்தித்துப் பேசினர்.
விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான பா.மா.கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்இணைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவோம் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை பிரணாப் முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் ஜெயலலிதாவைசந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தைநடத்துகிறார்கள்.
அதற்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்தை கேட்பதற்காக இருதலைவர்களும் தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர்களை கட்சி தலைமைஅலுவலகத்திலும், தங்கள் ஹோட்டல் அறையிலும் சந்தித்து பேசினர்.
பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களும் முகர்ஜியையும்,ஆசாத்தையும் ஹோட்டல் அறையில் சந்தித்து பேசினார்.
பல காங்கிரஸ் தலைவர்களும் தேவையான அளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால்அ.தி.ம.க. வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதே நல்லது என கூறியதாக தெரிகிறது.
முன்னதாக இரு தலைவர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்து90 நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் அவர்கள் நிருபர்களிடம்பேசுகையில், காங்கிரசும், த.மா.கா.வும்
இணைந்து செயல்பட்டு வருகின்றன.
த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்குவதாக தி.மு.க. தலைவர் கூறியுள்ளதுகாங்கிரஸ், த.மா.கா. உறவை பாதிக்காது.
பிரணாப் முகர்ஜி மேலும் கூறுகையில், மூப்பனாருடன் நடந்த பேச்சுவார்த்தைநம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பேச்சுவார்த்தையின் போது நாங்கள் தமிழகஅரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். எனவே மூன்றாவது அணி அமைவது கூடசாத்தியமே.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் தேர்தல் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன்பேச்சு நடத்துவோம் என கூறினார்.
தொகுதி பங்கீடு குறித்து திங்கள்கிழமை இறுதி முடிவு எட்டப்படுமா என்பது குறித்தகேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை,
த.மா.கா.வின் எம்.பி. ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இரண்டு கட்சிகளும் இணைந்துசெயல்பட்டு வருகின்றன என்றார். ஆனால் இரு கட்சியினரும் ஒரே கூட்டணியில்இருப்பார்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
த.மா.கா. வினர் சிலர் கூறுகையில் மூப்பனார் மதசார்பற்ற கூட்டணியில் இருப்பதாககூறியுள்ளார். ஆனாலும் எந்த கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்பது குறித்து இன்னும்முடிவு எடுக்கப்படவில்லை, விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினர்.
யு.என்,ஐ
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications