வாஜ்பாய் ஆட்சியில் வகுப்புக் கலவரம் இல்லை .. ஜமாத் இஸ்லாமி
கோவை:
வாஜ்பாய் அரசில் வகுப்புக் கலவரம் இல்லை என ஜமா அத் இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அகில இந்தியத்தலைவர் முகமது சிராஜூல் ஹாஸன் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறுபான்மை மக்களுக்கு பாரதிய ஜனதா, எவ்வித பாதிப்பும் வராது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புவன்முறை எதுவும் நிகழாத வரை உண்மையாகவே இருக்கும். பாபார் மசூதிப் பிரச்னைக்கு இரண்டு வழிகளில்தீர்வு உண்டு.
முதலாவது இந்தப் பிரச்னையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இருதரப்பினரையும் அழைத்துப்பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் ஒரு சுகமான முடிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இரண்டாவது, இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மதுராவில் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது எளிதான காரியம்அல்ல. எனவே, இந்தப் பிரச்னையில் எவ்வித நிர்ப்பந்தமோ, தலையீடோ இல்லாமல் இருக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்னையில் அரசின் அணுகுமுறை சரியானதாகவே உள்ளது. அங்கு சண்டை நிறுத்தம் நீடிக்க வேண்டும்என்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எப்படி இருந்தாலும், இறுதியில் அந்த மாநில மக்கள்சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு ஏற்படுத்த வேண்டும் என்றார் சிராஜூல் ஹாஸன்.












Click it and Unblock the Notifications