த.மா.கா. வுடன் பேச்சு நடத்தத் தயார் .. கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் எந்த நேரத்திலும் வந்து பேச்சுவார்த்தைநடத்தலாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இரண்டு தினங்களுக்கு முன் தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொதுக்குழுக் கூட்டத்தில்வரும் சட்டசபைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள த.மா.கா எந்த நேரத்திலும் வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்குத்தடையில்லை. நாங்கள் பல முறை த.மா.கா வுக்கு அழைப்பு விடுத்து விட்டோம். இனிமேலும் அழைப்பு விடுக்க மாட்டோம். இனிமேல் அவர்களாகவந்தால்தான் பேச்சுவார்த்தை.

மூப்பனாருடன் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் தான் இன்னும்அமையவில்லை என்றார்.

த.மா.கா., தி.மு.க கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு தமிழக சட்டசபையில் 40 தொகுதிகள் கொடுக்கப்படும். கடந்த தேர்தலிலும் 40 தொகுதிகள்தான் த.மா.கா வுக்குக் கொடுத்தோம்.

த.மா.கா தலைவர்கள் தனித்தனியாக வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இன்னும் மூப்பனார் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.த.மா.கா தலைவர்கள், காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க, ம.தி.மு.க, புதிய தமிழகம், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க, தமிழக ராஜீவ் காங்கிரஸ், தமிழ்நாடு தேசிய லீக்,மனித உரிமைக் கட்சி, எம்.ஜி.ஆர். கழகம், தமிழர் பூமி ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணியில் உள்ள கட்சியினர் அனைவரும் சேர்ந்து வரும் 25 ம் தேதிகூடி பேசவுள்ளோம். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்கும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லைஎன்றார் கருணாநிதி.

முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தூதர்களாக குலாம் நபி ஆசாத்தும், பிரணாப் முகர்ஜியும் ஞாயிற்றுக்கிழமைசென்னை வந்துள்ளனர். அவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அவர்கள் தொகுதிப்பங்கீடு குறித்துப்பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+