இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் கடத்தல்
டெல்லி:
இந்தியாவில் போதைப் பொருட்கள் கடத்துவதிலும், தெற்காசியாவில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களைக்கடத்துவதிலும் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது என்று சர்வதேச போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம்செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச போதைப் பொருட்கள் கட்டப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கைநாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஹெராயின் என்ற போதைப் பொருட்கள் அதிக அளவு கடத்தப்படுகிறது. ஐரோப்பாவிலும்இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் ஹெராயின் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.இங்கிருந்து கடத்தப்படும் போதைப் பொருட்களுக்கு வங்க தேசம், இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனைசெய்யப்படுகிறது.
மியான்மரிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பிறமாநிலங்களுக்கும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மோர்க், சாம்ப் மற்றும்மோகோக்சங் ஆகிய பகுதிகளில் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் மிசோரத்தில் போதைப் பொருட்கள் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதால் சாவு எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது என்று சர்வதேச போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டுவாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications