நம்புங்கள்.. இவர் ஜெயலலிதா தான்!
சென்னை:
ஜெயலலிதா என்றாலே 40 அடி, 80 அடி உயர கட்-அவுட் தான் நமக்கெல்லாம் நினைவுக்கு வரும்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர் செல்லும் வழியெல்லாம் கட்-அவுட்டால் வானத்தைத் தொட்டு பரவசப்பட்டனர் தொண்டர்கள்.
பகட்டும், ஆடம்பரங்களுமே தனக்கு வினையாகிவிட்டதை ஜெயலலிதா உணரத் தொடங்கியபோது காலம் கடந்து போயிருந்தது. ஆட்சி பறிபோயிருந்தது.
இப்போது ரொம்பவே மாறிவிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிப்பதில் ஆகட்டும், தொண்டர்களை கண்டிப்பதில் ஆகட்டும்நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது போயஸ் தோட்டத்தில்.
இப்போது இதற்கெல்லாம் உச்சமாக எனக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார் ஜெயா.
இதுகுறித்து சென்னையில் கட்சித்தொண்டர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது அதிமுக தொண்டர்கள் எனது பெரிய சைஸ் கட்-அவுட்டுக்களை உபயோகப்படுத்தியிருந்தார்கள். இதே போல் இந்ததேர்தலிலும் செய்தால் மக்கள் மத்தியில், அதிமுக ஆடம்பரச் செலவு செய்கிறது என்ற எண்ணம் ஏற்படும்.
இதனால் கட்சித் தொண்டர்கள் யாரும் ஆளுயர கட்-அவுட்டுக்கள் வைக்கவோ, மிகப் பெரிய போஸ்டர்கள் ஒட்டவோ வேண்டாம். போஸ்டர்கள்ஒட்டி, ஆளுயரக் கட் - அவுட்டுக்கள் வைத்து வீணாக பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டாம்.
அதே போல், வரும் 24 ம் தேதி எனது பிறந்தநாள். இதையும் கட்சித் தொண்டர்கள் மிக ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் கட்சித் தொண்டர்கள் யாரும் செயல்படக் கூடாது என்றுதொண்டர்களிடம் கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications