அனைத்து கட்சி கூட்டம் கூட்டுகிறார் பாண்டி தேர்தல் அதிகாரி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி விஜயன் புகைப்படம் ஒட்டிய வாக்காளர்அடையாள அட்டை வழங்குவது குறித்து இந்த மாதம் 22-ம் தேதி அனைத்து கட்சிகூட்டம் கூட்டவிருக்கிறார் என தேர்தல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையை திருத்தி அமைத்ததில் முறைகேடுகள் நடந்ததாகபல கட்சியினரும் குறை கூறிவந்தனர்.இது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டிவிவாதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
சில தினங்களுக்கு முன் இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட்டு அனைத்து கட்சிகூட்டம் கூட்டப்படும் என விஜயன் கூறியிருந்தார். அதன் படி வாக்காளர் அடையாளஅட்டை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேச இந்த மாதம் 22-ம் தேதி அனைத்து கட்சிகூட்டம் கூட்டப்படவிருக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications