காஷ்மீர் சண்டை நிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டம் ஆதரவு
டெல்லி:
காஷ்மீர் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சித் தலைவர்கள் புதன்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்துத்தெரிவித்தனர்.
காஷ்மீரில் சண்டை நிறுதத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமைதொடங்கியது.
இக்கூட்டத்தில் பல முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகளின் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் தின்ஷா, நீர் வளத் துறை அமைச்சர்அர்ஜூன் சேத்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் தவிர, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் மன் மோகன் சிங், சமாஜ் வாடி கட்சித் தலைவர்முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மாயாவதி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எர்ரா நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தளத்தைச்சேர்ந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், ஜனதா தளத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மை, சிவசேனா கட்சியைச் சேர்ந்த சதீஷ் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான தலைவர்கள் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மா கூறுகையில், காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். சண்டைநிறுத்தத்தை நீட்டித்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்றார்.
மேலும் காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அமைச்சரவை பாதுகாப்புக் குழுக் கூட்டமும் புதன்கிழமை மாலை கூடுகிறது.
பள்ளிக்குழந்தைகள் சந்திப்பு:
இதற்கிடையே காஷ்மீரைச் சேர்ந்த 46 க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பிரதமர் வாஜ்பாயை புதன்கிழமை சந்தித்தனர். இவர்கள் எல்லைப்பாதுகாப்புப் படை டிஜிபி குல்பச்சானுடன் டெல்லி வந்து பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தனர்.
காஷ்மீரிலிருந்து வந்துள்ள இவர்கள் டெல்லியில் செங்கோட்டை, ஜூம்மா மசூதி உள்பட பல இடங்களை சுற்றிப் பார்த்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications