மூப்பனார் தவிக்கிறார்... வைகோ சொல்கிறார்
கோவை:
காமராஜர் ஆட்சியை அமைக்க விரும்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 3 வது அணியைத் தான் அமைப்பர்என திருப்பூரில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டுபிரச்சாரம் செய்து வருகிறேன். மத்தியில் வாஜ்பாய் அரசினை வலுவுள்ளதாக நீட்டிக்கச் செய்ய தமிழகத்திலும்புதுவையிலும் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
இந்தக் கூட்டணியில் எந்தக் கட்சி இடம் பெற்றாலும் பெறாவிட்டாலும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியைப்பாதிக்காது. தமிழ் மாநில காங்கிரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்கவிரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அமைப்பது 3 வது அணியாக மட்டுமே இருக்கும். தற்போதுள்ளசூழ்நிலையில் எந்தப் பக்கம் சேருவது என்பது பற்றி மூப்பனார் முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
மதிமுக நிர்வாகிகள் கூட்டம்:
வரும் பிப். 25 ம் தேதி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் தேர்தலுக்குத் தயாராவதுபற்றி விவாதிக்கப்படும். ஆனால் தொகுதிப் பங்கீடு இதில் இடம் பெறாது. தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை,எவ்வித பிரச்னையும் எழாது என நினைக்கிறேன்.
முன்பு காங்கிரசை வீழ்த்த அ.தி.மு.க வை ஆதரித்தோம். இன்று சூழ்நிலை அப்படி இல்லை. வாஜ்பாய் கரத்தைவலுப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜெயலலிதா ஜனநாயகத்தை மதிக்காதவர். தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாம் உண்மையாகி விடுவதில்லை. கடந்த காலங்களில் கணிக்கப்பட்ட முடிவுகள் இதனைநிருபித்துள்ளது என்றார் வைகோ.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications