நாடாளுமன்றம், சட்டமன்றத்திலும் வீரப்பன் பிரச்சனை...
டெல்லி:
காட்டில் மட்டுமல்ல டெல்லி முதல் கேரளா வரை வீரப்பன் விவகாரம் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் சீதைவனம் காட்டுபகுதியில் தமிழக மற்றும் கர்நாடக கூட்டு அதிரடிப்படை போலீஸாரும், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களும் சேர்ந்து வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறனைக் கைது செய்தனர் என்று நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் வியாழக்கிழமைதெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மேல்சபையில் ராஜ்குமார் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழ்நாடு விடுதலைப் படை தலைவரும், வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியுமான மாறனை கூட்டு அதிரடிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிப்ரவரி 2 ம் தேதி மாறனையும், வீரப்பனின் கூட்டாளிகள் சிலரையும் அதிரடிப்படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அதற்குப்பிறகு வீரப்பன்கூட்டாளிகளுக்கும், அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அப்போது வீரப்பனின் கூட்டாளிகள், தங்களது உடைமைகளை விட்டுவிட்டுச் சென்றனர். வீரப்பன் கூட்டாளிகளுடன் நடந்த நேருக்குநேர் சண்டைக்குப்பின்வீரப்பன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு மற்றும் கோவை மாவட்டம் பொலுவம்பட்டி காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டார். அதற்குப்பிறகு கடந்த வாரம் மாறனை அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர் என்று கூறப்பட்டது.
கேரள சட்டசபையில்...
இதற்கிடையே, ஆட்டப்பாடி காடு அருகே சோலையூர் பகுதியில் வீரப்பனுக்கு உதவி செய்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 பழங்குடி மக்களைப்கூட்டு அதிரடிப்படைப் போலீஸார் கைது செய்து, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று கேரள முதல்வர் ஈ.கே.நாயனார் வியாழக்கிழமைமாநில சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
முன்னதாக சிபிஐ உறுப்பினர் ஜோஸ் பேபி, வீரப்பனுக்குக் உதவி புரிந்தது தொடர்பாக ஜனவரி 21 ம் தேதி கைது செய்யப்பட்ட 4 பழங்குடி மக்களை மாநிலஅரசு விடுவித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் நாயனார் கூறுகையில், ஜனவரி 21 ம் தேதி கைது செய்யப்பட்ட பழங்குடி மக்கள் பெயர் ராமன், ரங்கன், சின்னசாலைமற்றும் முருகன். கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து அரிசி மற்றும் 75,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் வீரப்பனுக்கு உதவி செய்து வந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவை முதன்மைநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
பின்னர் இவர்கள், கோவை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுச் செய்தனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 9 ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications