முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜோதிபாசு

Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

கே: சில சமயங்களில் டாக்டர் ராமதாசின் பேச்சுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பது ஏன்?

ப: சில சமயங்களிலா? என்ன கிண்டலா - இப்படியெல்லாம் குறைத்து மதிப்பிட்டால், ராமதாசுக்கு கோபம் வரும். ஜாக்கிரதை!

கே: ஆட்சியில் பங்கில்லை என்று ஒரு நண்பரும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு நண்பரும் பிடிவாதமாக இருப்பது குறித்து - தாங்கள்வருத்தப்பட்டதுண்டா?

ப: இதில் எல்லாம் எந்த பங்கும் வேண்டாம் என்று ஒதுங்குகிற மூன்றாவது நண்பருக்கு, இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?

கே: ஒரு வேளை அதிரடிப்படையிடம் வீரப்பன் சிக்கி விட்டால், தெரியாமல் நடந்து விட்ட நல்ல விஷயம் என்பீர்களா?

ப: இல்லை. இந்த மாதிரி நடந்தால் நான் என்ன சொல்வேன் என்பது, ஏற்கனவே வெளியாகியுள்ள எச்சரிக்கைப் பகுதியில் வந்துள்ளது. புதிதாக யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை.

கே: நீங்கள் எழுதி வந்த வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? கட்டுரைத் தொடரில் பிராமணர்களுக்கென்று உள்ள தர்மத்தை, இன்றுள்ள நிலையில்பிராமணன் ஒருவன் கடைபிடித்தால், அவன் கதி என்ன.?

ப: கும்பமேளா சாமியாராகப் போக வேண்டியதுதான்.

கே: தங்களின் அறிவுரையைக் கேட்டு உருப்பட்டவர்கள் யாருமில்லை, அப்படியிருந்தும் ஜெயலலிதா மீண்டும், மீண்டும் தங்களின் அறிவுரையை நாடுவது -அவரின் அறியாமையைத்தானே காட்டுகிறது?

ப: இதுபற்றி அறிவுரை உங்களுக்குத் தேவையா? நான் சொல்லி விடுவேன். அப்புறம் நீங்கள் எப்படி உருப்படுவது?

கே: கவர்னர் உரையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...?

ப: கவர்னர் உரையை கவனிக்கப் போகிறீர்களா? ஏன்? பொழுதே போகவில்லையா?

கே: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடும் அதிகாரம், நீதிபதிகளுக்குக் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது பற்றி ...?

ப: நீதிபதிகளிக்குக் கிடையாது - என்று சுப்ரீம் கோர்ட் கூறவில்லை. மாஜிஸ்ட்ரேட்களுக்குக் கிடையாது - என்று தான் கூறியிருக்கிறது.

கே: நடப்பு அரசியலில், தங்கள் மூளையை யோசிக்க வைத்த சம்பவம் எது?

ப: மூளையை நான் பயன்படுத்துகிறேன் - என்ற உங்கள் நம்பிக்கையை, இந்த கேள்விக்கு பதில் சொல்லிக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு, நான்மூளை கெட்டவனா என்ன?

கே: பதிமூன்று ஆண்டு கால தண்டனை போதாதா? என்று மக்களிடம் முறையிட்டார் கருணாநிதி அன்று: மக்கள் கருணாநிதிக்கு மீண்டும் வாய்ப்பு தந்தனர்.அதேபோல் ஜெயலலிதாவையும் மன்னித்து மீண்டும் ஒரு வாய்ப்பு தரலாம் அல்லவா...?

ப: உங்கள் கருத்தை ஜெயலலிதா அறிந்தால், தனக்கு 65 சதவிகித ஆதரவு இருப்பதாகக் கூறியதை மாற்றி, ஆதரவு மேலும் கூடி விட்டது என்றுஅறிவித்து விடுவார். உஷார்!

கே: ஜம்மு -காஷ்மீரில் வாஜ்பாய் அரசு அறிவித்த போர் நிறுத்தம் தந்த பலன் என்ன?

ப: இதுவரை ராஜரீக பலன்களை அளித்துள்ளது. சமாதான வழி முறைகளையே இந்தியா நாடுகிறது என்பதை பல நாடுகளும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு விட்டன.

இனிமேலும், நீட்டித்துக் கொண்டே போவதால், இந்த ராஜரீக பலன்கள் கூடி விடப் போவதில்லை. இந்த நிலையில் போர் நிறுத்த நீடிப்பு,தீவிரவாதிகளுக்கு உதவுவதாகவே அமையும் - என்ற நிலை தோன்றத் தொடங்கியுள்ளது.

ஆகையால் இந்த போர் நிறுத்தம் மறுபரிசீலனைக்குரியது. இனி இது அரசியல் விவகாரம் அல்ல: பாதுகாப்பு பிரச்னை. அந்த வகையில்தான் இதை இனிஅணுக வேண்டும் என்பது என் கருத்து.

கே: தமிழகத்தில் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் தலை தூக்கியிருப்பது உண்மைதான்! ஆனால் பிரிவினைவாத சக்திகளை தி.மு.க. ஆதரிக்காது என்றுநம்புகிறேன் என்கிறாரே இல. கணேசன்! அவரின் நம்பிக்கைக்கு அடிப்படை என்னவாம்?

ப: கூட்டணிதான் அடிப்படை. அதைவிட வலுவான அடிப்படை உண்டா?

கே: ஒருபுறம் வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக இருந்தால், சரணடைவது குறித்து அவனுடன் பேச்சு வார்த்தை நடத்த நான் தயார் என்றநெடுமாறன் அறிக்கை: இன்னொரு புறம் வீரப்பனைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூபாய் 20 லட்சம் பரிசு என்ற அரசின் அறிவிப்பு! இதிலிருந்து என்தெரிகிறது?

ப: துப்பு அறிவதில், அரசுக்கு ஆர்வம் இல்லையென்று தெரிகிறது.

வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்றும், அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்றும் நெடுமாறன் பலமுறை சொல்லி விட்டார்.

ஆனால், அவரிடம் இதுவரை, ஒருமுறை கூட போலீசார் வீரப்பன் எங்கிருக்கிறான்? என்று விசாரிக்கவில்லை. அப்படி விசாரணை நடந்தால், தான்அறிந்ததாக பறைசாற்றும் விஷயத்தை போலீசாரிடம் தெரிவிப்பது சட்டப்படி நெடுமானின் கடமை.

அப்படித் தெரிவிக்க மறுத்தால் அது குற்றம். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனாலும் இதுபற்றி அவரிடம் போலீஸ் விசாரணைஎதுவுமில்லை.

இதிலிருந்தே, வீரப்பனையும், தமிழ்த் தீவிரவாதிகளையும் பிடிப்பதில் அரசு காட்டும் அக்கறையின் லட்சணம் புரிகிறது, நிலைமை இப்படியிருக்க, பரிசு அறிவிப்புஒரு கேடா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+