ஜெ.விடம் கையேந்தி நிற்கும் த.மா.கா: தி.மு.க கிண்டல்
கும்பகோணம்:
25 இடங்களுக்காக போயஸ் தோட்டத்தில் கையேந்தி நிற்கிறது த.மா.கா. என்று ஆற்காடு வீராசாமி கூறினார்.
கும்பகோணத்தில் ரூ 48 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பாதாள சாக்கடைத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்காடு வீராசாமிபேசியதாவது:
உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருந்தது. இப்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இதே போல் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது, கிராமங்களில் தெரு விளக்கு, குடிநீர், மின்சார வசதி போன்ற அடிப்படை திட்டங்களைநிறைவேற்றுவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்து வருகிறது திமுக அரசு. தகவல் தொழில் நுட்பத்துறையில் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைவிட முன்னணியில் நிற்கிறது தமிழகம். இதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்.
சென்னையில் ரூ 348 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை திறந்து வைத்தார் வாஜ்பாய். டைடல் பார்க் திறந்த பிறகு தமிழகம் தகவல்தொழில்நுட்பத்தில் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை ஜப்பான், ஜெர்மன் நாட்டினர் பாராட்டுகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் 25 இடங்களுக்காக போயஸ் தோட்டத்தில் கையேந்தி நிற்கிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர். அவர்களதுநோக்கமெல்லாம் ஜெயலலிதா ஆட்சியைப் போல் கொள்ளையடிக்க வேண்டும் என்பதாகும் என்றார் ஆற்காடு வீராசாமி.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications