ஹன்ஸி குரோனியேவை விசாரித்த கிங் கமிஷன் கலைப்பு
பி. ராம்ராஜ்
ஜோகானஸ்பர்க்:
முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் ஹன்ஸி குரோனியே மீதான கிரிக்கெட் ஊழல் குறித்து விசாரித்து வந்த கிங் விசாரணைக் கமிஷன்கலைக்கப்படுவதாக அதன் தலைவர் நீதிபதி எட்வின் கிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீஸார் கண்டறிந்து வெளியிட்ட தகவலையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட கிரிக்கெட் ஊழலால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஹன்ஸி குரோனியே.
டெல்லி போலீஸாரின் குற்றச்சாட்டை முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்ட குரோனியேவிற்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்கிரிக்கெட் ஆயுட்காலத்தடை விதித்தது.
பின்னர் நியமிக்கப்பட்ட கிங் விசாரணைக்கமிஷன், அனைத்து உண்மைகளையும் தெரிவித்தால் குரோனியேவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது எனதெரிவித்திருந்தது. அது தொடர்பாக குரோனியேவின் வக்கீல்கள் எழுத்துபூர்வமான தகவல்களை கோரியிருந்தார் நீதிபதி எட்வின் கிங்.
விசாரணையின் முடிவில், குரோனியே மட்டுமே கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டதாக முடிவு செய்துள்ள கிங் கமிஷன் குரோனியேவிற்கு அளித்த வாக்குறுதிகுறித்து எதுவும் முடிவு செய்யாமலேயே கலைக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், விசாரணையில் குரோனியே அனைத்து உண்மைகளையும் தெரிவித்து விட்டார் என கிங் கமிஷன்அறிவிக்கும்பட்சத்தில் குரோனியே மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என தெரிவித்தார்.
கிங் கமிஷன் விசாரணையில் உண்மை அனைத்தும் வெளிவரவில்லை என பலர் கருதுகின்றனர். ஆனால், நீதிபதி எட்வின் கிங்கும், தென்னாப்பிரிக்காவின்விளாைட்டுத்துறை அமைச்சரும், குரோனியேவின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதோடு, மேற்கொண்டு விசாரிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் இல்லை எனதெரிவித்தனார்.
கிரிக்கெட் ஊழலில் சம்பாதித்த வெளிநாட்டு கரன்ஸிகளை தன் வீட்டில் வைத்திருந்ததாக குரோனியே கூறியுள்ளதால், சரியான வருமானம்காட்டாததற்காகவும், வெளிநாட்டு கரன்ஸியை அனுமதியின்றி வைத்திருந்ததற்காகவும் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி உள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications