டெஸ்ட் போட்டி வேறு பயிற்சியாட்டம் வேறு: திராவிட்
மும்பை:
இந்திய ஏ மற்றும் மும்பை அணியுடன் ஆடியதை வைத்து ஆஸ்திரேலியாவை எடை போடக்கூடாது. ஏனெனில், அவை ஆஸ்திரேலியாவிற்குபயிற்சியாட்டங்கள்.
டெஸ்ட் போட்டி என்று வரும் போது அவர்களின் ஆட்டம் வேறுபடும் என்கின்றனர் இந்திய வீரர்கள் ராகுல் திராவிட்டும், ஜவஹல் ஸ்ரீநாத்தும்.
மும்பையில் சனிக்கிழமையன்று காலையில் நிருபர்கள் கூட்டத்தில் பேசிய திராவிட்,
இந்திய ஏ அணி மற்றும் மும்பை அணிகள் ஆஸி.க்கு எதிராக சிறப்பாக ஆடின.
இவற்றிற்கு எதிரான ஆட்டங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாட்டமாகவே இருந்தது. டெஸ்ட் போட்டியில் ஆஸி.யின் ஆட்டம் வேறு மாதிரியாகஇருக்கும்.
இந்திய துவக்க ஜோடியான ரமேஷும், தாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இந்த தொடரில் நான் சிறப்பாக ஆட முயற்சிப்பேன். சதமடிப்பதைவிட அணியின் ரன்களை அதிகரிப்பது முக்கியமானது.
சென்னை பயிற்சி முகாம் பலவகையிலும் சிறப்பாக அமைந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆஸி. அணியினரின் விமர்சனங்களை பற்றி கூறும் போது அவர்கள் மைதானத்தில் சீரியஸாக இருந்தாலும் வெளியில் நல்ல நண்பர்களாகவே இருப்பர் எனதெரிவித்தார்.
ஜவஹல் ஸ்ரீநாத் பேசும் போது, கடந்த பத்தாண்டுகளாக இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளராக விளங்கிய அனில் கும்ப்ளே அணியில் இல்லாதது பெரியகுறை, அதற்காக அதைப்பற்றி மட்டுமே பேசுவது ல்லதல்ல.
அணியில் அகர்கர், ஜாகிர்கான் போன்ற பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அணியில் இடம்பெற்றுள்ள மற்ற சுழல் பந்து வீச்சாளர்களும் சிறப்பாகசெயல்படுவர் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை துவக்க ஆட்டக்காரரிலிருந்து கடைசி ஆட்டக்காரர் வரை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். எனவே, அனைத்துவிக்கெட்டுகளும் முக்கியமானவையே என்றார்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications