அடிப்படை உரிமைகள் குறித்து கைதிகளுக்குத் தெரிவிக்கப்படும்
பாண்டிச்சேரி:
கைதிகள் தங்கள் அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்காக இலவச சட்ட உதவி சிறைச் சாலைகளில் அளிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இ.பத்மநாபன் தெரிவித்தார்.
பாண்டிச்சேரி சட்டத்துறை தலைவராகவும் உள்ள நீதிபதி இ. பத்மநாபன், பாண்டிச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான இலவச சட்ட உதவி முகாமைசனிக்கிழமை தொடங்கி வைத்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வெங்கடாசல மூர்த்தி, கைதிகள் தாங்கள் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து கொள்வதோடுதாங்கள் சந்தித்துள்ள வழக்கு, அதன் தன்மை, மற்றும் அதனால் ஏற்படும் விளைவு குறித்தும் அறிந்து கொள்ள இந்த இலவச சட்ட உதவி முகாம்உதவும்.
தமிழகத்தில் மூன்று இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் இம்முகாம்களை புதுவையில் மேலும் பல இடங்களில் நடத்த புதுவை அரசுமுயற்சிக்க வேண்டும் என்றார்.
இம்முகாமின் போது கைதிகளுடன் பழகுபவர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட அரசு அனுமதிக்காது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை அரசுதலைமைச் செயலாளர் டி.டி.ஜோசப் தெரிவித்தார்.
பாண்டிச்சேரி தலைமை நீதிபதி ஓ.எம்.சந்திரசேகர் உள்ளிட்ட நீதிபதிகள் பலரும், போலீஸ் ஐ.ஜி. ஜே.பி.சிங், மற்றும் வக்கீல்கள் சங்க தலைவர் ஆலடிமகேந்திரன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications