இலங்கைக்கு உதவுவோம் என்கிறது ஐரோப்பா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் ஜனநாயகம் திரும்ப ஐரோப்பிய யூனியன் முயற்சிகளை மேற்கொள்ளும் என இலங்கை வந்துள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்குழுவின் தலைவர் ஜெரார்டு காலின்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டபின் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கையில் அமைதியான தேர்தல் நடைபெற ஐரோப்பிய யூனியன் தெரிவித்த யோசனைகளை அமல்படுத்துமாறு இலங்கை அரசு கோரப்படும்.

கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தேர்தல் பார்வையாளராக வந்த ஐரோப்பிய யூனியன் பலதேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை கோரியது.

தற்போதைய சுற்றுப்பயணத்தின் போது நாட்டில் உள்ள பல்வேறு மதத் தலைவர்களை சந்தித்து பேசிய குழுவினர், நாட்டில் நிலவும் மனித உரிமை மீறல்நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டனர்.

நாட்டில் பல்வேறு இடங்களில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளில் பலர் மீதான வழக்குகள் நீண்ட காலமாக விசாரிக்கப்படாததோடு, குற்றச்சாட்டுகள்எதுவும் சாட்டப்படாமல் பலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களை பயன்படுத்தி பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடை பெற்றுவருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு கோரப்பட்டுள்ளது.

மேலும், மறுவாழ்வு மையத்திலிருந்த தமிழர்களை சிங்களர்கள் படுகொலை செய்த சம்பவம் குறித்த விசாரணை தாமதப்படுத்தப்படுவது குறித்தும்இலங்கையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்த காலின்ஸ், ஐரோப்பிய யூனியன் இலங்கையில் ஜனநாயகம் திரும்ப தன்னால் முடிந்த அளவுஉதவுவோம் என்றார்.

கடந்தாண்டு இலங்கைக்கு உதவுவதற்கான உலக வங்கியின் கூட்டத்தில் இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறலையும், தமிழர் படுகொலையையும்ஐரோப்பிய யூனியன் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+