தேர்தலில் போட்டியிடுகிறது நாயுடு இன கூட்டமைப்பு
கோவை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் 97 தொகுதிகளில் நாயுடு இனக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேட்பாளர்பட்டியலுடன் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என இதன் தலைவர் கெங்குசாமி நாயுடு தெரிவித்தார்.
தமிழ்நாடு கம்மவார் நாயுடு மகாஜன சங்கம், தமிழ்நாடு தெலுங்கர் இன சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக இப்போது கெங்குசாமி நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
தமிழகத்தில் நாயுடு சங்கத்தினர் 2 கோடி பேர் உள்ளனர். வெல்மா, ரெட்டி, பலிஜா, கம்மா, காப்பு என பல்வேறு பிரிவுகளின்கீழ் நாயுடு இன மக்கள்பிரிந்து கிடக்கின்றனர். இவர்களோடு தெலுங்கு, செட்டியார், கன்னடி நாயுடு, ரவுத், போன்ற சங்கத்தினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்தும் எவ்வித பலனையும் பெற முடியாமல் உள்ள மாதிகா, ஆதி ஆந்திரா பிரிவினருக்கு தனியாக தாழ்த்தப்பட்டோர்பட்டியலில் 10 சதவீதம் அளிக்க வேண்டும். இது போன்ற 12 கோரிக்கைகளை முன் வைத்து தேர்தலில் வாக்குறுதி அளிக்கவுள்ளோம்.
இது குறித்து தி.மு.க அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. எனவே வரும் சட்டமன்றத்தேர்தலில் 97 தொகுதிகளில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். இந்த நிலையில் எங்களை அ.தி.மு.க.,வும் , 3வது அணி அமைக்க முயன்றுவருபவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை உறுதியாக நிறைவேற்றித் தரும் அணியுடன் நாங்கள் கூட்டு வைத்துக் கொள்ளத் தயாராகஉள்ளோம்.
வரும் மார்ச் 5ம் தேதி சென்னை சீரணி அரங்கில் நாங்கள் நடத்தவுள்ள மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.இந்த மாநாட்டில் தேர்தலில் போட்டியிடும் தொகுதி, அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கெங்குசாமி நாயுடு தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications