இது பிரிந்தவர்கள் ஒன்று சேரும் நேரம்
கோவை
கோவையில் நடந்த போலீஸ் கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பேசும்போது, இரண்டு ராதா கிருஷ்ணன்களைப் பாராட்டிப் பேசினார். ஒருவர் போலீஸ் கமிஷனர் கி. ராதா கிருஷ்ணன்.மற்றொருவர் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.,ராதாகிருஷ்ணன், எம்.பி., பா.ஜ.,கட்சித் தொண்டர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வீடியோ படம் பிடிக்கச் சென்ற போலீஸ் போட்டோகிராபரைகட்சித் தொண்டர்கள் தாக்கியதாகவும், இதற்கு தூண்டுதலாக எம்.பி., ராதாகிருஷ்ணன் இருந்ததாகப் போலீசார்வழக்கப் பதிவு செய்தனர்.
இது போலீஸ் கமிஷனரின் கி. ராதாகிருஷ்ணனின் உத்தரவுப் படிதான் நடந்தது எனவும், அவரை கோவை நகரைவிட்டு மாற்ற வேண்டும் எனவும், எம்.பி.,ராதாகிருஷ்ணன் தீவிரமாக இருந்தார்.
இந்நிலையில் கோவை போலீஸ்கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவில், சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இந்த கமிஷனர் அலுவலகத்தைத் திறந்து வைத்த முதல்வர் கருணாநதி பேசும்போது,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால், சில அசம்பாவிதசம்பவங்கள் கோவையில் நிகழ்ந்தது என எனது செயலர்கள் கூறினர். அப்போது கோவைக்கு போலீஸ் கமிஷனராகயாரை நியமிக்கலாம் எனக் கேட்டேன்.
அதற்கு திருச்சியில் உள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை நியமிக்கலாம் எனக் கூறினேன். கோவைக்குச்செல்கிறாரா எனக் கேட்கச் சொன்னேன். அப்போது ராதாகிருஷ்ணன், அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்செல்கிறேன் என்று கூறினார்.
உடனே நான் தேடிய ஆள் இவர் தான் என நினைத்து உடனே சென்னைக்கு அழைத்துப் பேசினேன். அப்போதுஒரு மாணவனைப் போல இருந்தார். சிறியவராகத் தோற்றமளித்தாலும் சிலையைச் செதுக்கும் "உளி இவர் தான்என நினைத்து கோவைக்கு அனுப்பினேன்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மீது மக்களவை எம்.பி.,ராதாகிருஷ்ணனுக்கு வருத்தம் இருக்கலமே தவிர,இருவரும் நல்லவர்கள். ராதாகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனைப் பாராட்டிப் பேசியதில்இருந்தே அவர் எவ்வளவு நல்லவர் என உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றார் முதல்வர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications